ர்நாடகாவின் பெல்தங்கடி மாவட்டத்தின் ஆன்மிக நகரமான தர்மஸ்தலா ஊடகக் கவனம் பெற்றிருக்கிறது. இந்த ஆன்மிக ஸ்தலத்தில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர் ஒருவர், "கோவில்களுக்கு வந்த நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல்ரீதியாக சூறையாடப்பட்டு கொன்று புதைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை நான் அடையாளம் காட்ட முடியும்'' எனச் சொல்லியிருப்பதால் இந்தியாவின் கண்கள் தர்மஸ்தலாமீது திரும்பியிருக்கிறது.

Advertisment

இங்குவரும் பெண்கள் பல்லாண்டு களாகக் காணாமல் போயிருக்கின்றனர். 2003 முதல் 2013 வரை இங்கு வந்த 462 பேர் அசாதாரணமாக மாயமாகியுள்ளனர். ஆனால், கோவில்மீது முறையான விசாரணையோ, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதோ இல்லையென்பதுதான் ஆச்சரியம்.

சரி இப்போது மட்டும் என்ன நடந்துவிட்டது?

சமீபத்தில் இந்த தர்மஸ்தலா கோவிலில் பணிபுரிந்த ஊழியரொருவர், நீதிமன்றத்தின் முன்பு சரணடைந்து. "இந்தக் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்களின் சடலங்களைப் புதைத்திருக்கிறேன். அவர்களைப் புதைத்த இடங்கள்கூட தெரியும்'' என்று சொல்லியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"என்னை மிகவும் பாதித்தது 2010-ல் நடந்த ஒரு சம்பவம்தான், கலையரியிலுள்ள பெட்ரோல் பம்பிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஓரிடத்துக்கு அழைத்துச்சென்றனர். 15 வயதுக்குள்ளிருந்த பள்ளி மாணவியின் சடலம் இருந்தது. அவள்மீது பாலியல் வன்முறை நடந்ததற்கான தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவளது பள்ளிப் பையையும் சேர்த்துப் புதைத்தேன்'' என அவர் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டை நிரூபிக்க, அப்படி தான் புதைத்த ஒரு குழியைத் தோண்டி அதில் கிடைத்த எலும்புகளின் புகைப்படத்துடனான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

Advertisment

2003-ஆம் ஆண்டு கல்லூரிச் சுற்றுலாவுக்கு வந்த அனன்யா மாயமான விவகாரத்தில்தான் தர்மஸ்தலாவின் பெயர் பரபரப்பாக அடிபட்டது. இதில் வேடிக்கையென்ன வென்றால் அனன்யாவின் தாயார் சுஜாதா, இந்தியாவின் உயர்விசாரணை அமைப்பான சி.பி.ஐ. அலுவலகத்தில் வேலைசெய்தவர். தன் மகளைக் கண்டுபிடிக்க அவர் தீவிரமாகக் களமிறங்கியபோது, அவர் யாராலோ கடுமையான தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

2012-ல் தர்மஸ்தலாவில் சௌஜன்யா எனும் 17 வயது பெண் வன்புணர்வு செய்யப் பட்டு கொல்லப்பட்டது பரபரப்பானது. இன்றுவரை அந்த வழக்கும் தீர்க்கப்பட வில்லை. அந்த வழக்கில், அதிகாரத்தி லிருப்பவர்கள் போலீஸை செயல்படவிட வில்லை என்று புகாரெழுந்தது. 

bjpmp1

Advertisment

இந்தக் கோவிலில் பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடக்கும் மர்மங்களைக் கண்டுபிடிக்கவேண்டும், அதை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என கர்நாடக மாநிலத்தின் பெண்கள் ஆணையத்தின் தலைவர், முன்னாள் நீதிபதி கோபால் என, பலரும் கோரிக்கைவிடுக்க விஷயம் தீவிரமடைந்துள்ளது.

"என்னிடம் எரிக்க வந்த பிணங்கள் பலவும் முறையான உடைகள் இல்லாமலோ, உள்ளாடைகள் இல்லாமலோதான் வந்தன. சில பிணங்கள் பாலியல்ரீதியான தாக்குதல், காயங்கள், அல்லது கழுத்தை நெறித்ததற்கான தடயங்களுடனும் இருந்திருக்கின்றன. ஒருசமயம் 13 வயது பள்ளிப் பெண்ணின் உடலும் வந்திருக்கிறது. அவளது பள்ளிச்சீருடை அப்படியே இருந்தது. ஆனால் அவளது உள்ளாடைகள் இல்லாமலிருந்தன. மற்றொரு சமயம் ஒரு பெண் உடல் வந்தபோது, அவளது முகம் அமிலத்தால் சிதைக்கப் பட்டு காகிதத்தால் முகம் மறைக்கப்பட்டிருந்தது'’என நெஞ்சுபதைக்க வைக்கும் பல விஷயங்களை வெளியிடுகிறார்.

எப்போதாவது கேள்விகள் கேட்டால், உன்னை துண்டு துண்டாக வெட்டியெறிந்துவிடுவோம். முன்பு எப்படி கேள்வி கேட்காமல் புதைத்தாயோ… எரித்தாயோ… அதுபோல் இதையும் செய்துமுடி என பலமுறை அவர் மிரட்டப்பட்டதாகக் கூறியுள்ளார்.

bjpmp2

தைரியமாக தர்மஸ்தலா ஆலயத்தில் நடந்ததை வெளிப்படுத்தவந்துள்ள ஊழியர் ஒரு தலித். தர்மஸ் தலா மஞ்சுநாதர் ஆலயத்தின் ஊழியராக இருபதாண்டு கள் பணியாற்றியிருக்கிறார். 2014-ல் அவரது குடும் பத்தைச்சேர்ந்த இளம்பெண் ஒருத்தியே கோவிலின் உயர்நிர்வாகப் பொறுப்பிலிருந்தவர்களால் பாதிக்கப் பட்ட பிறகே கோவிலிலிருந்து தப்பியோடியிருக்கிறார்.

"நான் புதைத்த, எரித்த நபர்களுக்கு முறையான இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை. அவர்களுக்கு அதைச் செய்தால்தான் அவர்கள் சாந்தியடைவார்கள். எனது குற்ற உணர்ச்சியும் சற்றாவது அடங்கும். கோவில் நிர்வாகக்குழுவில் இருப்பவர்கள் மிகவும் செல்வாக்கானவர்கள். எனது உயிருக்கும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது''’என தெரிவித்திருக்கிறார்.  

தர்மஸ்தலாவில் கொல்லப்பட்ட பெண்கள் குறித்த மர்மம் தீர்க்கப்படவில்லையெனில், அது தர்மஸ்தலா எனும் பெயருக்கே பொருத்தமற்றதாக ஆகும்.

bjpmp3